குறள்: 658கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும்.

To those who hate reproof and do forbidden thingWhat prospers now, in after days shall anguish bring

மு.வரதராசன் உரை

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

கலைஞர் உரை

தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்

Explanation

The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow

Kural Info

குறள் எண்:658
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத் தூய்மை
இயல்:அமைச்சியல்