குறள்: 71அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.

And is there bar that can even love restrain?The tiny tear shall make the lover's secret plain

மு.வரதராசன் உரை

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

சாலமன் பாப்பையா உரை

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

கலைஞர் உரை

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்

Explanation

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

Kural Info

குறள் எண்:71
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அன்புடைமை
இயல்:இல்லறவியல்