குறள்: 75அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.

Sweetness on earth and rarest bliss above,These are the fruits of tranquil life of love

மு.வரதராசன் உரை

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

சாலமன் பாப்பையா உரை

இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்

கலைஞர் உரை

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்

Explanation

These are the fruits of tranquil life of love

Kural Info

குறள் எண்:75
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அன்புடைமை
இயல்:இல்லறவியல்