குறள்: 32அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.

No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws

மு.வரதராசன் உரை

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

கலைஞர் உரை

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

Explanation

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it

Kural Info

குறள் எண்:32
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
இயல்:பாயிரவியல்