குறள்: 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.

Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there

மு.வரதராசன் உரை

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

கலைஞர் உரை

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்

Explanation

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)

Kural Info

குறள் எண்:121
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அடக்கம் உடைமை
இயல்:இல்லறவியல்