குறள்: 123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின்.
If versed in wisdom's lore by virtue's law you self restrainYour self-repression known will yield you glory's gain
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise
| குறள் எண்: | 123 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அடக்கம் உடைமை |
| இயல்: | இல்லறவியல் |