குறள்: 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.

Let man relieve the wasting hunger men endure;For treasure gained thus finds he treasure-house secure

மு.வரதராசன் உரை

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

கலைஞர் உரை

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்

Explanation

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth

Kural Info

குறள் எண்:226
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஈகை
இயல்:இல்லறவியல்