குறள்: 311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னாசெய்யாமை மாசற்றார் கோள்.
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,No ill to do is fixed decree of men in spirit pure
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness
| குறள் எண்: | 311 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | இன்னா செய்யாமை |
| இயல்: | துறவறவியல் |