குறள்: 312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

Though malice work its worst, planning no ill return, to endure,And work no ill, is fixed decree of men in spirit pure

மு.வரதராசன் உரை

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர் உரை

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்

Explanation

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil

Kural Info

குறள் எண்:312
Category:அறத்துப்பால்
அதிகாரம்:இன்னா செய்யாமை
இயல்:துறவறவியல்