குறள்: 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.

Who have no lore save that which fraudful arts supply,Acts of unmeasured vice committing straightway die

மு.வரதராசன் உரை

களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

கலைஞர் உரை

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்

Explanation

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression

Kural Info

குறள் எண்:289
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கள்ளாமை
இயல்:துறவறவியல்