குறள்: 324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.

You ask, What is the good and perfect way?'Tis path of him who studies nought to slay

மு.வரதராசன் உரை

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

கலைஞர் உரை

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்

Explanation

Good path is that which considers how it may avoid killing any creature

Kural Info

குறள் எண்:324
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கொல்லாமை
இயல்:துறவறவியல்