குறள்: 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.
Ev'n death that life devours, their happy days shall spare,Who law, 'Thou shall not kill', uphold with reverent care
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life
| குறள் எண்: | 326 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கொல்லாமை |
| இயல்: | துறவறவியல் |