குறள்: 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.

Whose trade is 'killing', always vile they show,To minds of them who what is vileness know

மு.வரதராசன் உரை

கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

சாலமன் பாப்பையா உரை

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

கலைஞர் உரை

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்

Explanation

To minds of them who what is vileness know

Kural Info

குறள் எண்:329
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கொல்லாமை
இயல்:துறவறவியல்