குறள்: 332கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.

As crowds round dancers fill the hall, is wealth's increase;Its loss, as throngs dispersing, when the dances cease

மு.வரதராசன் உரை

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

கலைஞர் உரை

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்

Explanation

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly

Kural Info

குறள் எண்:332
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நிலையாமை
இயல்:துறவறவியல்