குறள்: 339உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
Death is sinking into slumbers deep;Birth again is waking out of sleep
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு
Death is like sleep; birth is like awaking from it
| குறள் எண்: | 339 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நிலையாமை |
| இயல்: | துறவறவியல் |