குறள்: 377வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
Save as the 'sharer' shares to each in due degree,To those who millions store enjoyment scarce can be
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)
| குறள் எண்: | 377 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | ஊழ் |
| இயல்: | ஊழியல் |