குறள்: 193நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.

Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains

மு.வரதராசன் உரை

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

கலைஞர் உரை

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

Explanation

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

Kural Info

குறள் எண்:193
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பயனில சொல்லாமை
இயல்:இல்லறவியல்