குறள்: 194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.
Unmeaning, worthless words, said to the multitude,To none delight afford, and sever men from good
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,
| குறள் எண்: | 194 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | பயனில சொல்லாமை |
| இயல்: | இல்லறவியல் |