குறள்: 198அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.

The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance

மு.வரதராசன் உரை

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

சாலமன் பாப்பையா உரை

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

கலைஞர் உரை

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்

Explanation

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

Kural Info

குறள் எண்:198
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பயனில சொல்லாமை
இயல்:இல்லறவியல்