குறள்: 61பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற.

Of all that men acquire, we know not any greater gain,Than that which by the birth of learned children men obtain

மு.வரதராசன் உரை

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர் உரை

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

Explanation

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children

Kural Info

குறள் எண்:61
Category:அறத்துப்பால்
அதிகாரம்:மக்கட்பேறு
இயல்:இல்லறவியல்