குறள்: 232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ்.

The speech of all that speak agrees to crownThe men that give to those that ask, with fair renown

மு.வரதராசன் உரை

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

கலைஞர் உரை

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்

Explanation

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor

Kural Info

குறள் எண்:232
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புகழ்
இயல்:இல்லறவியல்