குறள்: 240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.

Who live without reproach, them living men we deem;Who live without renown, live not, though living men they seem

மு.வரதராசன் உரை

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

சாலமன் பாப்பையா உரை

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

கலைஞர் உரை

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்

Explanation

Those live who live without disgrace Those who live without fame live not

Kural Info

குறள் எண்:240
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புகழ்
இயல்:இல்லறவியல்