குறள்: 265வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.

That what they wish may, as they wish, be won,By men on earth are works of painful 'penance' done

மு.வரதராசன் உரை

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

சாலமன் பாப்பையா உரை

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

கலைஞர் உரை

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்

Explanation

Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)

Kural Info

குறள் எண்:265
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தவம்
இயல்:துறவறவியல்