குறள்: 341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.

From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he

மு.வரதராசன் உரை

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

கலைஞர் உரை

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை

Explanation

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain

Kural Info

குறள் எண்:341
Category:அறத்துப்பால்
அதிகாரம்:துறவு
இயல்:துறவறவியல்