குறள்: 343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

'Perceptions of the five' must all expire;-Relinquished in its order each desire

மு.வரதராசன் உரை

ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

கலைஞர் உரை

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்

Explanation

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired

Kural Info

குறள் எண்:343
Category:அறத்துப்பால்
அதிகாரம்:துறவு
இயல்:துறவறவியல்