குறள்: 344இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.

'Privation absolute' is penance true;'Possession' brings bewilderment anew

மு.வரதராசன் உரை

தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை

உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

கலைஞர் உரை

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்

Explanation

To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state

Kural Info

குறள் எண்:344
Category:அறத்துப்பால்
அதிகாரம்:துறவு
இயல்:துறவறவியல்