குறள்: 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)
| குறள் எண்: | 293 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | வாய்மை |
| இயல்: | துறவறவியல் |