குறள்: 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.

True to his inmost soul who lives,- enshrinedHe lives in souls of all mankind

மு.வரதராசன் உரை

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

கலைஞர் உரை

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்

Explanation

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men

Kural Info

குறள் எண்:294
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்