குறள்: 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.

Every lamp is not a lamp in wise men's sight;That's the lamp with truth's pure radiance bright

மு.வரதராசன் உரை

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

கலைஞர் உரை

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்

Explanation

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise

Kural Info

குறள் எண்:299
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்