குறள்: 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

The hand that smites the earth unfailing feels the sting;So perish they who nurse their wrath as noble thing

மு.வரதராசன் உரை

(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

கலைஞர் உரை

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்

Explanation

Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail

Kural Info

குறள் எண்:307
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வெகுளாமை
இயல்:துறவறவியல்