குறள்: 178அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.

What saves prosperity from swift decline?Absence of lust to make another's cherished riches thine

மு.வரதராசன் உரை

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

கலைஞர் உரை

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்

Explanation

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness

Kural Info

குறள் எண்:178
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வெஃகாமை
இயல்:இல்லறவியல்