குறள்: 81இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.

All household cares and course of daily life have this in viewGuests to receive with courtesy, and kindly acts to do

மு.வரதராசன் உரை

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்

சாலமன் பாப்பையா உரை

வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

கலைஞர் உரை

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே

Explanation

The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality

Kural Info

குறள் எண்:81
Category:அறத்துப்பால்
அதிகாரம்:விருந்தோம்பல்
இயல்:இல்லறவியல்