குறள்: 87இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.

To reckon up the fruit of kindly deeds were all in vain;Their worth is as the worth of guests you entertain

மு.வரதராசன் உரை

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்

சாலமன் பாப்பையா உரை

விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

கலைஞர் உரை

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்

Explanation

The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure

Kural Info

குறள் எண்:87
Category:அறத்துப்பால்
அதிகாரம்:விருந்தோம்பல்
இயல்:இல்லறவியல்