குறள்: 1144கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.

The rumour rising makes my love to rise;My love would lose its power and languish otherwise

மு.வரதராசன் உரை

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை

ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

கலைஞர் உரை

ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்

Explanation

Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away

Kural Info

குறள் எண்:1144
Category:காமத்துப்பால்
அதிகாரம்:அலர் அறிவுறுத்தல்
இயல்:களவியல்