குறள்: 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர்.
The dew on her white teeth, whose voice is soft and low,Is as when milk and honey mingled flow
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!
இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey
| குறள் எண்: | 1121 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | காதற் சிறப்புரைத்தல் |
| இயல்: | களவியல் |