குறள்: 1123கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம்.
For her with beauteous brow, the maid I love, there place is none;To give her image room, O pupil of mine eye, begone
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved
| குறள் எண்: | 1123 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | காதற் சிறப்புரைத்தல் |
| இயல்: | களவியல் |