குறள்: 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

I might recall, if I could once forget; but from my heartHer charms fade not, whose eyes gleam like the warrior's dart

மு.வரதராசன் உரை

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.

சாலமன் பாப்பையா உரை

ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

கலைஞர் உரை

ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு

Explanation

If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her (Thus says he to her maid)

Kural Info

குறள் எண்:1125
Category:காமத்துப்பால்
அதிகாரம்:காதற் சிறப்புரைத்தல்
இயல்:களவியல்