குறள்: 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.

Within my heart my lover dwells; from food I turnThat smacks of heat, lest he should feel it burn

மு.வரதராசன் உரை

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை

என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

கலைஞர் உரை

சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்

Explanation

As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him

Kural Info

குறள் எண்:1128
Category:காமத்துப்பால்
அதிகாரம்:காதற் சிறப்புரைத்தல்
இயல்:களவியல்