குறள்: 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னும் இவ் வூர்.
Rejoicing in my very soul he ever lies;'Her love estranged is gone far off!' the village cries
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar
| குறள் எண்: | 1130 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | காதற் சிறப்புரைத்தல் |
| இயல்: | களவியல் |