குறள்: 1171கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது.
They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)
| குறள் எண்: | 1171 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | கண் விதுப்பழிதல் |
| இயல்: | கற்பியல் |