குறள்: 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண்.

Who loved me once, onloving now doth here remain;Not seeing him, my eye no rest can gain

மு.வரதராசன் உரை

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

சாலமன் பாப்பையா உரை

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

கலைஞர் உரை

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

Explanation

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him

Kural Info

குறள் எண்:1178
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கண் விதுப்பழிதல்
இயல்:கற்பியல்