குறள்: 1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.

When he comes not, all slumber flies; no sleep when he is there;Thus every way my eyes have troubles hard to bear

மு.வரதராசன் உரை

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை

அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

கலைஞர் உரை

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்

Explanation

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony

Kural Info

குறள் எண்:1179
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கண் விதுப்பழிதல்
இயல்:கற்பியல்