குறள்: 1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.
It is not hard for all the town the knowledge to obtain,When eyes, as mine, like beaten tambours, make the mystery plain
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums
| குறள் எண்: | 1180 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | கண் விதுப்பழிதல் |
| இயல்: | கற்பியல் |