குறள்: 1094யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்தான்நோக்கி மெல்ல நகும்.

I look on her: her eyes are on the ground the while:I look away: she looks on me with timid smile

மு.வரதராசன் உரை

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை

நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

கலைஞர் உரை

நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

Explanation

When I look, she looks down; when I do not, she looks and smiles gently

Kural Info

குறள் எண்:1094
Category:காமத்துப்பால்
அதிகாரம்:குறிப்பறிதல்
இயல்:களவியல்