மொத்தம்: 20 குறள்கள்
குறள்: 701கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி.
குறள்: 702ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள்: 703குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல்.
குறள்: 704குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு.
குறள்: 705குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்?
குறள்: 706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்.
குறள்: 707முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.
குறள்: 708முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.
குறள்: 709பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்.
குறள்: 710நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்லது இல்லை பிற.
குறள்: 1091இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
குறள்: 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது.
குறள்: 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்.
குறள்: 1094யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்தான்நோக்கி மெல்ல நகும்.
குறள்: 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்
குறள்: 1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.
குறள்: 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
குறள்: 1098அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.
குறள்: 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.
குறள்: 1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.