குறள்: 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.

I once retained reserve and seemly manliness;To-day I nought possess but lovers' 'horse of palm'

மு.வரதராசன் உரை

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

கலைஞர் உரை

நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

Explanation

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful

Kural Info

குறள் எண்:1133
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நாணுத் துறவுரைத்தல்
இயல்:களவியல்