குறள்: 1134காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.

Love's rushing tide will sweep away the raftOf seemly manliness and shame combined

மு.வரதராசன் உரை

நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

சாலமன் பாப்பையா உரை

ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

கலைஞர் உரை

காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

Explanation

The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust

Kural Info

குறள் எண்:1134
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நாணுத் துறவுரைத்தல்
இயல்:களவியல்