குறள்: 1291அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது.

You see his heart is his aloneO heart, why not be all my own

மு.வரதராசன் உரை

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

கலைஞர் உரை

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

Explanation

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

Kural Info

குறள் எண்:1291
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நெஞ்சொடு புலத்தல்
இயல்:கற்பியல்