குறள்: 1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

'Tis plain, my heart, that he 's estranged from thee;Why go to him as though he were not enemy

மு.வரதராசன் உரை

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

கலைஞர் உரை

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே

Explanation

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

Kural Info

குறள் எண்:1292
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நெஞ்சொடு புலத்தல்
இயல்:கற்பியல்