குறள்: 1299துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.
And who will aid me in my hour of grief,If my own heart comes not to my relief
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?
ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
| குறள் எண்: | 1299 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நெஞ்சொடு புலத்தல் |
| இயல்: | கற்பியல் |